திருக்கோயில் வரலாறு

முன்னொரு காலத்தில் இந்துவனம் என்றும் பதாப்காச்சரமம் என்றும் கூறப்பட்ட நமது வடுகநாதசுவாமி ஆலயம் இருந்த இடமானது எலந்தை மரங்களால் சூழப்பட்டு வனமாக இருந்தது. அதன் நடுவிலே விடங்கமுனிவர் என்பார் காசி விஸ்வநாதரை வேண்டி தவமிருந்து வந்தார் . அவரது தவத்திற்கு இடையுறு செய்து வந்தனர் அசுரர்கள் அந்த இடையுறு நீங்க வேண்டி காசி விஸ்வநாதரை வணங்கி தங்களது அறுபத்து நான்கு மூதார்களில் ஒருவரான ஸ்ரீவடுக பைரவரை அனுப்பி எனது தவத்தை இடையுரின்றி காப்பாற்ற வேண்டும் என்று வணங்கினார்.அதன் பொருட்டு இந்துவனத்தில் அவதாரித்தார் நமது வடுக பைரவர்.

பிற்காலத்தில் வாணிப செட்டியார்கள் கேரள மலையாள தேசத்திலிருந்து குறுமிளகு கொண்டுவந்து பாண்டிய தேசத்தில் வாணிபம் செய்து வந்தனர்.சேர நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இந்துவனம் எல்லையாக விளங்கியது. இந்த இந்து வனத்திற்கு எல்லை வகுத்து கொடுத்ததாக இங்கு அரசமரத்தினடியில் சுயம்பு மூர்த்தியாக பாம்படிஸ்வரர் என சிவன் பெயர் பெற்று இருப்பது தனி சிறப்பு. மீண்டும் தனது சிறப்பை உணர்த்தும் வகையில் இரவுப் பொழுதில் அரசமரத்தினடியில் மிளகு பொதி ஏற்றி வந்த வண்டியில் வாணிபர் கண்ணயார்ந்திருக்க வயோதிக அந்தணர் வேடங் கொன்டு வாணிபரிடம் மிகவும் இருமளாக உள்ளது. சிறிது மிளகு வேண்டும் என கேற்க வாணிபரோ இது மிளகல்ல அந்தனரே பாசிப்பயறு என புறம் கூறிவிட்டார் . அந்தணரும் அப்படியே ஆகட்டும் என கூறி மறைந்தார்.

பின் சிறிது நாள் கழித்து மதுரையம் பதிக்கு சென்று களஞ்சியத்தில் மிளகு என கூறி பொதிகளை கொடுக்க . களஞ்சிய நிர்வாகி பொதியை அவிழ்த்து பார்த்து திகைத்தார், புறங்கூறிய வாணிபரை மன்னன் முன்பாக நிறுத்தினார்.மன்னன் சினந்து கழுமரம் ஏற்றச் சொல்லி தீர்வு கூறினான் அப்போது வானத்தில் நமது வடுகநாதசுவாமி மந்தகாச சிரிப்புடன் தோன்றி யாமே மிளகை பயிராக்கியவன் என்றும் நடந்த திருவிளையாடலையும் கூறினார்.

சேரநாட்டுக்காரர்கள் மாந்திரிகத்தில் வல்லவர்கள் அதனால் நம்மிடம் ஏமாற்றுகிறார்களோ! என மன்னவன் நினைத்து யோசனை செய்து நமது வடுகநாதசுவாமியிடம் அப்படியானால் எனது இரு ஊனமுற்ற குழந்தைகளை நீங்கள் குணப்படுத்தினால் தங்களை நம்புகிறேன் என்று கூறினார்.

வடுகநாத கடவுளும் அப்படியானால நான் இருக்கக் கூடிய இந்து வனத்தில் வந்து எனது தந்தை குடி கொண்டுள்ள அரசமரத்திலிருந்து வடக்கு நோக்கி நீண்டுள்ள கிளை காட்டும் திசையில் எலந்தை மரத்தினடியில் உள்ள புற்றின் கீழாக எனது பிரதி பிம்பமாக விளங்கக்கூடிய சிலை விக்ரமமானது உள்ளது அதனை எடுத்து முறைப்படி ப்ரதிஷ்டை செய்வித்து பாலும் மிளகும் அபிஷேகம் நிவேதனம் செய்வித்து உனது குழந்தைகளுக்கு அப்பிரசாதத்தை கொடுத்து சாப்பிட செய்தால் குணமாகும் என கூறி மறைந்தார். மன்னனும் அவ்வாறு செய்து வருகையில் குழந்தைகள் உடல் நலம் குணமாகியது.